சென்னையில் பிரமாண்ட பூங்கா உருவாக்கப்படும்-கருணாநிதி
சென்னை: பெங்களூரில் உள்ள லால்பாக், ஊட்டி தாவரவியல் பூங்காக்களைப் போல சென்னை நகரின் மையப் பகுதியில் 320 கிரவுண்ட் பரப்பில் அழகான, பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அண்ணா மேம்பாலம் அருகே இந்த பிரமாண்டமான உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தற்போது உள்ள உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ள இடத்தில் இந்த பூங்கா அமையவுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ளது. இந்த இடம் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமானது என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த இடத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த இடத்தில் உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், உட்லண்ட்ஸ் டிரைவ் இன் உள்ள இடத்தில், 320 கிரவுண்டு பரப்பளவில் உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
பெங்ளூரில் உள்ள லால்பாக் மற்றும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு நிகராக இந்த சென்னை தாவரவியல் பூங்கா எழிலுற அமைக்கப்புடம். உலகத் தரத்தில் இந்த பூங்கா அமையும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த இடத்தை மீட்டுத் தந்துள்ளது.
தாவரவியல் பூங்கா அமைக்க ரூ. 1000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் மூலம் சென்னை நகரம் மேலும் அழகு பெறும் என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications