ஐபிஎல்: கங்குலி, டிராவிட் அணிகள் வெற்றி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 20-20 போட்டியின் ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2வது வெற்றி கிடைத்தது. டிராவிட் தலைமையிலான பெங்களூர் ராயர் சேலஞ்சர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் 20-20 போட்டித் தொடரின் 3வது நாளான நேற்று கொல்கத்தாவில் கங்குலி அணிக்கும், லட்சுமண் தொடர்பான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் இடையே மோதல் நடந்தது.

இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கங்குலி அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணியின் கில்கிறைஸ்ட் 23 ரன்களும், சைமண்ட்ஸ் 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் சுருண்டனர். இறுதியில், 18.4 ஓவர்களில் லட்சுமண் அணி 110 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து கங்குலி அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. கடந்த போட்டியில் ரன் மழை பொழிந்த மெக்கல்ல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டேவிட் ஹூசே அபாரமாக ஆடி 38 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்கவில்லை. அவர் ஒரு விக்கெட்டையும் பந்து வீச்சின்போது வீழ்த்தியிருந்தார்.

இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 112 ரன்கள் எடுத்து கங்குலி அணி 2வது வெற்றியைப் பெற்றது.

மும்பையில் நடந்த மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.

இதில் டெண்டுல்கர் விளையாடவில்லை. இதையடுத்து கேப்டன் பொறுப்பை ஹர்பஜன் சிங் ஏற்றார். முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் ராபின் உத்தப்பா 48 ரன்களும், ஜெயசூர்யா 29 ரன்களும், போலாக் 28 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது டிராவிட் அணி. அந்த அணியின் கேப்டன் டிராவிட், சிவ்நரைன் சந்தர்பால் ஆகியோர் சிறப்பாக ஆடினர். டிராவிட் 32 ரன்களைக் குவித்தார். சந்தர்பால் 16 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த டெய்லர் 23 ரன்களும், கோலி 23 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை டிராவிட் அணிக்கு ஏற்பட்டபோது மார்க் பெளச்சர் அதிரடியாக ஆடி சிக்சர்களையும், பவுண்டரிகளையும் குவித்து மும்பை அணியை சிதறடித்தார்.

19 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் பெளச்சர் 39 ரன்களை குவித்தார்.

இறுதியில், 19.4 ஓவர்களில் 166 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது டிராவிட் அணி. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்ற டிராவிட் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+