முத்துக்கருப்பனை அவமதித்த கேரள அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்
சின்னார் (கேரளா): தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஐஜியும், முன்னாள் சென்னை நகர ஆணையாளருமான 'கருணாநிதி கைது புகழ்' முத்துக்கருப்பனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட கேரள அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக முத்துக்கருப்பன் தற்போது உள்ளார். தனது குடும்பத்தினரோடு கேரள மாநிலம் மறையூருக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். இதற்காக உடுமலைப்பேட்டை, சின்னார் வழியாக அவர் மறையூர் செல்வார்.
சமீபத்தில் மறையூர் சென்றார் முத்துக்கருப்பன். அப்போது கேரள எல்லையான சின்னாரில் கேரள விற்பனை வரித்துறைக்கு சொந்தமான செக் போஸ்ட்டில், நெடுங்கண்டம் விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் சோமன் பணியில் இருந்துள்ளார்.
முத்துக்கருப்பன் காரை தடுத்து நிறுத்திய சோமன், குடிபோதையில் முத்துக்கருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகாத வார்த்தைகளைப் பேசி அவமரியாதையாக நடந்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்கருப்பன் கேரள மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து சோமன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications