ஈரோடு: நீரோடையில் கழிவு-17 ஆலைகளுக்கு சீல்
ஈரோடு: நீரோடையில் கழிவுகளை கலந்த 17 சாய பட்டறைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த ஆலைகள் மூடப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் பகுதியில் சாயம், அச்சு மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகள் அதிகம். மாவட்ட சுகாதார பொறியாளர் ஜோசப் பாண்டியராஜ் தலைமையிலான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த ஆலைகளில் அதிரடி சோதனை செய்தனர்.
24 ஆலைகளில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதில் 17 ஆலைகளில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 17 ஆலைகளையும் உடனடியாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த ஆலைகளுக்கு மின் விநியோகமும் உடனே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஜோசப் பாண்டியராஜ் கூறுகையில், காவிரி ஆற்றில் மாசு கலப்பதை தடுக்கவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது. காவிரி ஆறுதான் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம். ஆலைகளின் ரெய்டுகள் தொடரும் என்றார்.
கடந்த 22ம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ரெய்டில் 12 சாய மற்றும் பிளீச்சிங் ஆலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications