கல்யாணம் செய்து வைக்க மறுத்த தாயை கொன்ற மகன்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: திருமணத்திற்குப் பெண் பார்க்க மறுத்த தாயை குத்திக் கொன்றார் மகன். மேலும் இரு பெண்களுக்கும் வெட்டு விழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி என்ற இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவர் தனது தாயார் கஸ்தூரியிடம் (45)தனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சக்தியின் அண்ணனுக்கு கல்யாணம் செய்த பின்னர்தான் சக்திப் பண்ண முடியும் என கஸ்தூரி கூறியுள்ளார்.

இதனால் கோபமடந்தார் சக்தி. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தாயாரை சரமாரியாக வெட்டினார்.

இதைத் தடுக்க வந்த தனது சித்தி மற்றும் அவரது மகளையும் வெறித்தனமாக வெட்டினார். கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பரமக்குடி மருத்துவமனையிலும், இன்னொருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 பேரையும் வெட்டித் தள்ளிய சக்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+