தமிழகத்தில் 1.6 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளில் 35 லட்சம் ரேஷன் கார்டுகள் போலி என்று எல்காட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,979 போலி கார்டுகள் உள்ளன.
இதை கண்டுபிடிக்கும்போது நியாயமாக கார்டு வைத்திருப்போரும் பாதிப்பார்களே. இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் 286 பணியாளர்களை வைத்து எப்படி போலி கார்டுகளை கண்டுபிடிப்பீர்கள். போலி கார்களை தடு்க்க பெருவிரல் ரேகையை அடையாளமாக பதிய வைத்து கொடுக்க முடியுமா என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு, கடந்த மார்ச் 31 வரை தமிழ் நாட்டில் 1 கோடியே 97 லட்சத்து 47,517 கார்டுகள் உள்ளன. கடந்த 2004-05ல் விடுபட்டவர்களுக்கு 36.59 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2வது கட்டமாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது 2.93 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டன.
2005ல் 1.49 கோடி கார்டுகள் புதுப்பிக்கப்பட்டன. இவை எல்லாம் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இவற்றையெல்லாம் சாப்ட்வேர் மூலம் ஒருங்கிணைத்தோம். அப்போது ஒரே எண்ணில் பல அட்டைகள் இருப்பதும், ஒரே குடும்பத்தில் 4, 5 அட்டைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
34 லட்சத்து 51,312 கார்டுகள் போலி ரேஷன் கார்டு இருப்பதி தெரிய வந்தது. தாலுகா வாரியாக தனித்தனி சி.டி.க்களாக பிரித்து முகவரி எடுக்கப்பட்டது. அதை வைத்து வீடு வீடாக சோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.
கடந்த 11ம் தேதி வரை 30,05,217 வீடுகளில் சோதனை செய்ததில் 69,770 போலி கார்டுகளை கண்டுபிடித்து நீக்கினோம். கடைகளில் நடந்த விசாரணையில் 96,520 அட்டைகள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,66,290 போலி கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு 33.25 கோடி மிச்சமானது. எல்காட் நிறுவனம் கண்டுபிடித்த அத்தனையும் போலி என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் 3 கோடி போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் சமீபத்தில் கூறி இருந்தார். இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
பரிசோதனை முறையில் இரண்டு இரண்டு மாவட்டங்களாக ஆய்வுக்கு எடுத்து முழுமையாக போலி அட்டைகளைக் களைய ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்க வேண்டிய பணியும் உள்ளது. எனவே இதில் போலியான ரேஷன் கார்டுகள் வராத அளவுக்கு கை ரேகைகளை பதிவு செய்யலாமா அதைவிட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டுகளை வழங்கலாமா என்பது முடிவு செய்யப்படும்.
போலி அட்டைகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்றார் வேலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications