காஸ் விவகாரம்: பதவி விலக மாட்டேன் - டி.ஆர்.பாலு
டெல்லி: எனது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காஸ் வழங்கிய விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே இதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், நாங்கள் சேது சமுத்திரத் திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தீவிரமாக உள்ளேன்.
இதன் காரணமாகவே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், காஸ் விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்தி என்னை ராஜினாமா செய்ய வைக்க முயன்று வருகின்றன.
ராஜ்யசபாவில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் என் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. அவர் இந்த அளவுக்கு கீழே போவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்களில் எனது குடும்ப உறுப்பினர்களும் சிலர். அவர்களது பிரச்சினை குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் எடுத்துக் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் பாலு.
நாடாளுமன்றத்தில் இன்று அரசு விளக்கம்:
இதற்கிடையே, டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா இன்று நாடாளுமன்றத்தில் விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை பிரதமர் அலுவலகம், எனது துறைக்கு 'பார்வர்ட்' செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
பாலு உறவினர்களுக்கு காஸ் சப்ளை செய்யுமாறு எனது துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. மாறாக, அந்த நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை எனது துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது, அவ்வளவுதான் என்றார் தியோரா.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications