பிரசவத்தின்போது பெண் பலி - உறவினர்கள் போராட்டம்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்தின்போது பெண் பலியானார். இதையடுத்து மருத்துவமனையைத் தாக்கி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஒரு பிளம்பர். இவரது மனைவி ஆனந்தி (20). கல்யாணமாகி ஒன்றரை வருடங்களாகிறது.
கர்ப்பமாக இருந்த ஆனந்தியை பிரசவத்திற்காக தண்டையார்பேட்டையில் உள்ள நேதாஜி நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு சிசேரியன் மூலம் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆனந்தி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சேர்த்த பின்னரும் ஆனந்திக்கு உதிரப் போக்கு நிற்கவில்லை. இந்த நிலையில் ஆனந்தி உயிரிழந்தார்.
இதைக் கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் நேதாஜி மருத்துவமனை முன்பு திரண்டனர். மருத்துவமனையை அடித்து தாக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications