பாஸ்போர்ட் மாயம் எதிரொலி: கொடுத்த பாஸ்போர்ட்டுகளை மாற்றும் தூதரகம்
துபாய்: துபாய் இந்தியத் துணைத் தூரகதத்திலிருந்து அனுப்பப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் தொலைந்து போனதைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட சீரியல் எண் கொண்ட பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
துபாய் துணைத் தூதரகத்திலிருந்து கடந்த ஆண்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் 500 காணாமல் போய் விட்டன. இவை திருடப்பட்டு தீவிரவாதிகள் கைக்குப் போயிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை திரும்பக் கொடுத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி இசட்-0000001 முதல் இசட்- 045925 வரை சீரியல் எண்களைக் கொண்ட பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றோர் அவற்றை எங்கு பெற்றார்களோ, அங்கு கொடுத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவை இலவசமாகவே செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள், மேற்கொண்ட சீரியல் எண்களைக் கொண்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தால் அவற்றை துபாய் துணைத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட் பெறலாம். இதற்காக அங்கு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூரியர் மூலமும் இவற்றைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications