சென்னை வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து
சென்னை: சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள பழமையான வணிக வளாகத்தில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் எதிரே உள்ள மாண்டியத் சாலையில் உள்ளது சிசன்ஸ் காம்ப்ளக்ஸ் எனப்படும் வணிக வளாகம். இந்தப் பகுதியில் நிறுவப்பட்ட முதல் வணிக வளாகம் இதுதான்.
5 மாடிகளைக் கொண்ட மிகவும் பழமையான இந்த வளாகத்தில் மேலே உள்ள 3 தளங்களில் குடியிருப்புகளும், கீழே உள்ள 2 தளங்களில் வணிக நிறுவனங்களும் இருக்கின்றன.
மிகவும் பழையான இந்தக் கட்டடம் ஆங்காங்கே பெயர்ந்து போய்க் காணப்படுகிறது. இதனால் இதை பராமரிப்பு செய்ய வேண்டும் என இங்குள்ளவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் அதை கட்டட உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் தரைத் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அது அப்படியே 5வது மாடிக்குப் பரவியது. இதனால் பெரும் புகை மூட்டம் எழுந்தது. மின்சாரக் கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஐந்து பெண்கள் மயக்கமடைந்தனர். அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புடைய கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து போய் விட்டன. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications