உத்தபுர சுவர் உடைப்பு: தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணம்-காரத்
மதுரை: உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது, தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் கடந்த 1989ம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 40 அடி நீளத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
அந்த சுவரை இடிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து நேற்று அங்கு சென்ற அதிகாரிகள், அதிரடியாக சுவரின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளினர்.
இந் நிலையில் இந்த சுவரை எதி்ர்த்து முன்னி்ன்று போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இன்று அந்த இடத்தை பார்வையிட்டார்.
பிரகாஷ் காரத்துக்கு ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளி்த்தனர். அப்போது பேசிய காரத், உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணமாகும். மாநிலம் முழுவதும் இதே போன்ற தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து ஒரு பிரிவினர் இன்றும் மலையில் வாசம் செய்யும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்பகுதியில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications