குற்றாலம் பூங்காவில் கண்கவர் கொரியன் புல் தரை
தென்காசி: குற்றாலம் பேரூராட்சி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்கவர் கொரியன் புல் தரையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் அருவிகளுக்கு அடுத்தப்படியாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடமாக பூங்காக்கள் உள்ளன. மெயின் அருவி பூங்கா, பேருந்து நிலையம் அருகில் உள்ள விசுவநாதராவ் பூங்கா இரண்டும் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காக்களில் தற்போது பசுமையான மலர் செடிகளோ, புல் தரைகளோ இல்லை. சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழும் ஊஞ்சல்கள், சீசா பலகை போன்ற விளையாட்டு சாதனங்களும் பழுதடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு குளுகுளு சீசன் முன்னதாக துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
இதையடுத்து நிலையில் சுற்றுலா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பூங்காக்களை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி விசுவநாதராவ் பூங்காவில் உள்ள சிலைகள் ரூ.2..5 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. மேலும் ரூ.3 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக பூங்காக்களில் கொரியன் மற்றும் சாதாரண புல் தரைகள் அமைக்கப்பட உள்ளது.
இது தவிர ரூ.1 லட்சம் செலவில் பூங்காக்களில் மெல்லிசை ஒலி பரப்பும் நவீன ஸ்பீக்கர்களும் பொருத்தப்படுகிறது.
இதனால் இந்தாண்டு குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மூலிகை அருவிகளில் குளிப்பதால் உடல் ஆரோக்கியத்துடன், பூங்காக்களில் மனஅமைதியையும் பெற்றுச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications