தீவிரவாதத்தை எதிர்த்து அணிதிரள ஜெ. அழைப்பு
சென்னை: தீவிரவாதத்தை எதிர்க்க எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
ஜெய்ப்பூரின் இதயப்பகுதியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 63 பேர் உயிரிழந்தும் 150 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு சம்பங்கள் நடத்தப்பட்டு உள்ளன.
நாட்டில் சமாதானத்தைக் குலைக்கும் தீவிரவாத சக்திகளஇன் தந்திர செயல் இது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த அறிவில்லாத கொடூரத்தனமான தாக்குதலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஓரணியில் திரள ஒருமனதாகத் தீர்மானிக்க வேண்டும்.
இந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications