உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 89 பேர் பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெய்த பலத்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 89 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
உத்தர பிரதேச மாநில மேற்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்துவருகிறது. இத்துடன் பலத்த புழுதி காற்றும் வீசி வருகிறது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்தன. பல இடங்களில் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
அப்பகுதிகளில் தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கியது. லக்னோ உள்பட பல பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
புழுதி காற்று மற்றும் கன மழையின் கோர தாண்டவத்துக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கன்னாஜ் மாவட்டத்தில் 14 பேரும் இடாவா பிரோஸாபாத் மாவட்டங்களில் தலா 10 பேரும் கான்பூர், திஹார் மாவட்டங்களில் தலா 9 பேரும் பலியாயினர்.
பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications