போலி விசா: 3 சாமியார்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற 3 சீக்கிய சாமியார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயல்வோர் மீது சமீப காலமாக கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை புளோராவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த 3 சீக்கிய சாமியார்கள் உள்பட 5 பேர் போலி விசா பெற முயன்றதாக கைதாகியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த அர்ஜூன் சிங், ஹரியாணாவைச் சேர்ந்த ஹர்சரன் சிங், அமர்ஜித் சிங் ஆகிய மூன்று சீக்கிய சாமியார்களும் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றனர். அமெரிக்காவில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாராவில் நடைபெறும் விழாவில் தங்களுக்கு பணியாற்ற அழைப்பு விடுத்திருப்பதாக 3 பேரும் தங்களது விசா விண்ணப்பத்தில் கூறியிருந்தனர். இதுதொடர்பான நியமன உத்தரவையும் அவர்கள் இணைத்திருந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் விசாரித்தபோது அப்படி எந்த நியமனமும் செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக 3 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக மேலும் இருவரும் நேற்று பிடிபட்டனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications