ஆபரேஷனுக்கு லஞ்சம் - டாக்டர் சஸ்பெண்ட்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கிய அரசு டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திருநாவுக்கரசு.
இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் புரோக்கர்கள் மூலம் இவர் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் வெள்ளாப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரிடம் ரூ 5000 வாங்கியுள்ளார் டாக்டர் திருநாவுக்கரசு. அதே போன்று நடுப்பட்டியை சேர்ந்த நான்கு பெண்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அவர்களிடம் தலா ரூ 5000 லஞ்சமாக வாங்கியுள்ளார்.
இதுகுறித்து கடந்த 2004 ம் ஆண்டு மணப்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சிதம்பரம் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்ரினார். ஆனால் டாக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இருந்தாலும் சிதம்பரம் தொடர்ந்து புகார்களை அனுப்பியவண்ணம் இருந்தார். இதன் விளைவாக டாக்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் லஞ்சம் வாங்கிய டாக்டர் திருநாவுக்கரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications