Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஜராகாததால் சிவகாசி ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

Jayalakshmi
மதுரை: நகை மோசடி வழக்கில் சிவகாசி ஜெயலட்சுமி ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஏட்டு முதல் எஸ்.பி. வரை பலரை தனது வலையில் வீழ்த்தி அவர்கள் மூலமும், அவர்களிடமும் மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் சிவகாசி ஜெயலட்சுமி.

மதுரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர் முருகேவலின் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய்க்கு நகைகளை வாங்கிக் கொண்டு பணத்தைத் தராமல் மோசடி செய்ததாக இவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

அதேபோல ஜெயலட்சுமி மீது கோபம் கொண்ட இளங்கோவன் தனது மைத்துநர் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு ஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள், மகன், மகள் உள்ளிட்டோரைக் கடத்திச் சென்றதாகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

நகை மோசடி வழக்கில் ஜெயலட்சுமி தவிர அவரது தந்தை அழகிரிசாமி, தம்பி சீனிவாசன், மாமா நாராயணமூர்த்தி, அவரது மகன் அழகர்சாமி, உள்பட மேலும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் 5 வது நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஐராகவில்லை. ஜெயலட்சுமி தவிர மற்ற நால்வரும் வர முடியாத காரணத்தை தங்களது வழக்கறிஞர்கள் மூலம் நீதி மன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால் சிவகாசி ஜெயலட்சுமி மட்டும் வர முடியாததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வக்கீலையும் அனுப்பவில்லை.

இதையடுத்து சிவகாசி ஜெயலட்சுமிக்கு நீதிபதி சரவணன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். அவரை ஜூலை 10ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+