காரில் செல்லும் 'மணல் பணம்'-பி.எச். பாண்டியன்
கரூர் இரட்டை வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் ஆக்கிமிப்புகள் அகற்றப்பட்டன. அங்கு சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.
அங்கு குடியிருந்தவர்களின் வீடுகளை இடிக்கப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நநடந்த ஆர்பாட்டத்திற்கு பி.எச். பாண்டியன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,
இரட்டை வாய்க்கால் கரையோர பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு அரசின் சார்பில் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வீடுகளுக்கு சொத்து வரி, குடி நீர் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். மேலும் மக்கள் வழிபட்டு வந்த இரண்டு கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தை இரண்டு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலி செய்யாதாதல் வீட்டு உரிமையாளர் வேலைக்கு சென்ற தருணத்தில் பொக்லைன் மூலம் அந்த வீடுகளை இடித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதி மக்கள் மாற்று இடம் இன்றி தவித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித நிவாரணமும், உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், உதவியும் உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. தமிழகத்தின் மணல் கடத்தல் மையமாக கரூர் திகழ்கதிறது.
கரூரில் இருந்து தினமும் ஒரு கார் சென்னையை நோக்கி செல்கிறது. இந்த காரின் முன்னும் பின்னும் பலத்த பாதுகாப்போடு செல்கிறது. காரணம் என்ன?. அந்த காரில் தான் 'மணல் பணம்' சென்னையை நோக்கி செல்கிறது.
தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்













Click it and Unblock the Notifications