களக்காடு-முண்டந்துறை வனப் பகுதியில் மீண்டும் தீ
விக்கிரமசிங்கபுரம்: புலிகள் சரணாயலமான களக்காடு-முண்டந்துறையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய புலிகள் காப்பகம் களக்காடு-முண்டந்துறை. பல் உயிரினப் பெருக்கம் நடைபெறும் இப்புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 ஏக்கர் பரளப்பளவில் உள்ள புற்களும், மற்றும் சருகுகள் எரிந்து சாம்பலாயின.
இது குறித்து அறிந்த வனத்துறை அமைச்சர் செல்வராஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதோடு, தீ பிடித்ததற்கான காரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையி்ல் முண்டந்துறை வனச்சரக பகுதியான பாதர்மலை பீட்டில் மீண்டும் திடிரென தீப்பிடித்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியி்ல் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
வனத்துறையினரை பார்த்தவுடன் சிலர் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தீயை வனத்துறையினர் மற்றும் அப்பகுதியின் பழங்குடி காணி இன மக்கள் சேர்ந்து சில மணி நேரங்களிலேயே முற்றிலுமாக அணைத்தனர்.
வனப்பகுதியில் தீப் பிடித்த இடத்தில் இருந்து ஓடிய விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
முண்டந்துறை வனச் சரகத்தில் வைத்து இவர்களிடம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக இணை இயக்குனர் பத்ரசாமி மற்றும் முண்டந்துறை வனச்சரகர் பிள்ளை விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டு அதன் தடயம் தெரியாமல் தடுக்கவே அப் பகுதியில் தீயை வைத்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications