நீதிபதிகள் தேர்வுக்கு முஸ்லீம் சட்ட அகாடமியின் பயிற்சி வகுப்பு
நெல்லை: நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சி முகாமிக்கு தமிழ்நாடு முஸ்லீம் சட்ட அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக நீதிதுறையில் காலியாக உள்ள 201 சீவில் நீதிபதிகள் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு வருகிற ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள், அரசு வக்கீல்கள் இந்த தேர்வுக்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்காக சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாடு மூஸ்லிம் சட்ட அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அகாடமியின் பொது செயலாளர் வக்கீல் ஜாபர் அலி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 201 சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பாளையங்கோட்டை சதக்கதுல்லா கல்லூரியில் இன்று முதல் 3ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதில் திறமை வாய்ந்த நீதிபதிகள், சீனியர் வக்கீல்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். இன்று மாலை 4 மணிக்கு பயிற்சி வகுப்பை சென்னை ஐகோர்ட் ஒய்வு நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் துவக்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.