கடையை உடைத்து மது பாட்டில்களை ரோட்டில் வீசிய ரோஜா
ஆந்திராவில், பல கடைகளிலும் மதுபானங்கள் விற்கப்படுவதாக தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி நடிகை ரோஜா குற்றம் சாட்டி வருகிறார்.
இந் நிலையில் திருப்பதியில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அவர் போராட்டம் நடத்தினார்.
அப்போது திருப்பதி ஜீவகோனை பகுதியில் ஒரு கடையில் சட்ட விரோதமாக மது பானம் விற்கப்படுவதாக அவருக்கு தகவல் கிடைக்கவே தொண்டர்களுடன் அங்கு சென்றார்.
ரோஜா வருவதை அறிந்து அந்தக் கடை பூட்டப்பட்டது. ஆனால், அந்தக் கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்த ரோஜா உள்ளே நுழைந்து அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பானங்களை ரோட்டில் வீசி உடைத்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ரோஜாவை போலீசார் கைது செய்தனர்.
அவரை வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றபோது தொண்டர்கள் வேன் முன்பு படுத்துக் தடுத்தனர்.
போலீசார் தொண்டர்களை அப்புறப்படுத்தி விட்டு ரோஜாவை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை எச்சரித்துவிட்டு சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டனர்.
இதையடுத்து திருப்பதி கலால்துறை அலுவலகம் சென்ற ரோஜா அங்கு தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கடைகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பதை தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டுவிட்டு சென்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்













Click it and Unblock the Notifications