என்னை விமர்சனம் செய்யுங்கள்-ராமதாஸ்
சென்னை: என்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யுங்கள், அவ்வாறு நீங்கள் செய்யும் விமர்சனத்தை வைத்து நான் திருத்திக் கொள்வேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
விழாவில் பேசிய கவிஞர் பழமலை என்னைப் பற்றி விமர்சிப்பேன் என்றார். என்னை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். பத்திரிகையாளர்களை நான் சந்திக்கும் போது கூட, என்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யுங்கள், அவ்வாறு நீங்கள் செய்யும் விமர்சனத்தை வைத்து நான் திருத்திக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறேன்.
கவிஞர்களாகிய நீங்கள் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் விமர்சனம் செய்யலாம். அவ்வாறு விமர்சனம் செய்யும்போது நான் மேலும் பணியாற்ற தூண்டுதலாக இருக்கும்.
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தை எங்கள் கட்சிக்குத் தேவை என்பதற்காகத் தொடங்கவில்லை. தமிழ் மொழியை வளர்ப்பதற்கு ஒரு இயக்கம் தேவை என்பதால் இது தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் போல் ஆயிரம் இயக்கங்கள் தேவை. இவ்வாறு ஆயிரம் இயக்கங்கள் தோன்றினால்தான் தமிழ் மொழியை வளர்க்க முடியும்.
இங்கு பேசிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், எச்சரிக்கையோடும் வருத்தத்தோடும் பல செய்திகளை எடுத்துக் கூறினார். ஜூலை மாதம் 24ம் தேதியை கருப்பு ஜூலை என்று கூறினார்.
பக்கத்தில் உள்ள இலங்கை தமிழர்களை, தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம். அவர்களின் விடுதலைக்காக எந்த அளவுக்கு பாடுபடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் இலங்கை தமிழர்களை என் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு தூங்குவேன். இலங்கையில் உள்ள தமிழர்களும், தமிழக மீனவர்களும் தினம் தினம் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களைப் பற்றி பேச, எழுத கவிஞர்களாகிய நீங்கள் முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சினிமா திரையரங்குகளிலும், மதுக் கடைகளிலும் இருப்பதை நான் பார்க்கிறேன். இவர்களை மாற்றுவதற்காக கவிஞர்கள் எழுத வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்காக அரசியலுக்கு அப்பால் 10,000 சான்றோர் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி குரல் கொடுக்க வேண்டும். இது விரைவில் நடக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கூத்துப் பள்ளி தொடங்குவது என்னானது என்று பலர் கேட்டார்கள். கூத்துப் பள்ளியை தொடங்கி அதை நடத்துவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொன்னோமே?. எங்கே தான் தமிழ் இருக்கிறது என்று என்னுடன் வாதிடத் தயாரா என்று நான் கேட்டு வருகிறேன். நான் பேச்சாளன் அல்ல, எழுத்தாளன் அல்ல. நான் ஒரு மருத்துவர் தான். எனக்குத் தெரிந்த தமிழில் நான் வாதிடத் தயாராக இருக்கிறேன். வேறு யாராவது பொது மேடையில் எங்கே தமிழ் இருக்கிறது என்று வாதிட தயாரா?
அரசியல் என்றால் ஆட்சி மாற்றம், படைப்பாளிகள் என்றால் சமூக மாற்றம். அரசியலிலும் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இந்த இயக்கம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மற்ற இயக்கங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். இந்த இயக்கத்துக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எனக்கு ஆணையிடுங்கள். யாரை எப்படி பாராட்ட வேண்டும் என்று கூறுங்கள். நான் அதன்படி செயல்படுகிறேன் என்றார் ராமதாஸ்.
விழா முடிந்த பின் ராமதாசை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, திமுக கூட்டணியில் பாமக நீடிக்கிறதா? இல்லையா?. ஒரே வரியிலாவது பதில் சொல்லுங்கள் என்றனர்.
ஆனால், நான் இங்கு அரசியல் பேச மாட்டேன் என்று மட்டும் பதில் தந்துவிட்டு காரில் ஏறிவிட்டார் ராமதாஸ்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications