யு.எஸ். பெண் கற்பழிப்பு வழக்கில் திருப்பம்-கற்பழிக்கப்படவில்லை
சென்னை: கற்பழிக்கப்பட்டதாக சர்ச்சைக்குள்ளான அமெரிக்க பெண் வழக்கில், அவர் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் கெல்லி பேக்கர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரது கணவரும் அமெரிக்கரே. கெல்லி, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் பேக்கர், சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார்.
கடந்த மாதம் 24ம் தேதி கணவரும், மனைவியுமாக மது அருந்த ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றனர். பாதியிலேயே பேக்கர் வீடு திரும்பி விட்டார். ஆனால் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் கெல்லி.
இந்த நிலையில் அடுத்த நாள் அதிகாலையில் அவர் அண்ணா நகரில் பிளாட்பாரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை இரு பிபிஓ ஊழியர்கள் மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து கெல்லி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடன இருவர் மது அருந்தியதாகவும், அவர்கள்தான் தன்னை கடத்திச் சென்று கற்பழித்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தனது செல்போன், கைப்பை ஆகியவற்றை திருடியிருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜோஸ் மாத்யூ, ஷாஜி ஜான் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவருக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. கெல்லிக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த மருத்துவப் பரிசோதனையில் கெல்லி கற்பழிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் கெல்லியை வைத்து ஆபாசப் படம் எதுவும் எடுக்கப்பட்டிருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதையடுத்து போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜோஸ் மற்றும் ஷாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதி கலைப் பொன்னி, இருவரையும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications