நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: ராஜேந்தர்
சென்னை: தமிழக அரசியலில் நடக்கும் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி யிலிருந்து வெளியேற்றுவதும், பின்னர் சேர்த்து கொள்வதும் முதல்வரின் வாடிக்கை. இதில் எந்த புதுமையும் இல்லை. இதனால் அரசியல் திருப்பம் ஏதும் ஏற்படாது. பொது மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் லதிமுக இடம் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில்தான் முடிவு தெரியும். நல்ல கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2 மாதங்களில் 15 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம்.
சனிக்கிழமை புதுக்கோட்டையில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீட்பு விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து அரியலூர், திருப்பூர், கோவை, தேனி, மேலூர், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், தேவக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டம் உள்பட 18 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளேன்.
நாளை துவங்கும் இந்த சுற்றுப் பயணம் வரும் ஆகஸ்ட் மாதம் 16ந் தேதி வரை 2 மாத காலத்துக்கு நீடிக்கிறது என்றார் ராஜேந்தர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications