பாமகவை விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை: எச். ராஜா
மயிலாடுதுறை: பாமகவை விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
அணு ஒப்பந்தம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இடதுசாரிகளும் ஆதரவை வாபஸ் பெறகூடும். இதனால் காங்கிரஸ் அரசு கலகலக்க துவங்கியுள்ளது. எனவே விரைவில் நாடு தேர்தலை சந்திக்க உள்ளது.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உள்பட அத்தியாவசிய பொருட்கள் கட்டுக்குள் இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பண வீக்கம் 11 சதவீத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது.
பங்கு சந்தையில் தீவிரவாதிகள் பணம் புழங்குவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. சுய நலத்துடன் செயல்பட்டு வருகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தர்மத்தை மீறவில்லை. அவர் வெளியில் இருந்து தான் திமுகவிற்கு ஆதரவு அளித்து வந்தார்.
பாஜக ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்தபோது, பெட்ரோல் விலை வெறும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக அமைச்சர்களே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர்களுடன் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
அது போன்று திமுக ஆட்சியை எதிர்த்து பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து பாகம போராட்டம் நடத்தவில்லையே. எனவே பாமகவைப் பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்றார் அவர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications