5ம் தேதி கருணாநிதி டெல்லி பயணம்?
சென்னை: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையே நிலவி வரும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேச்சு நடத்த முதல்வர் கருணாநிதி 5ம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறவேற்றியே தீருவது என மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அவ்வாறு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் முக்கியக் கூட்டம் வரும் 4ம் தேதி நடக்கிறது. அதில் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப்பட்டால் மத்திய ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் ஆட்சி கவிழ்வதையும், இடைத் தேர்தல்வருவதையும், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் விரும்பவில்லை. காரணம், தேர்தல் வந்தால் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவர்களிடம் இல்லாததே.
எனவே நெருக்கடிக்கு இடைக்கால தீர்வை ஏற்படுத்திட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். குறிப்பாக முதல்வர் கருணாநிதி இதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
மேலும், முலாயம் சிங் யாதவ், தேவே கெளடா, அஜீத் சிங் ஆகியோரின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் முனைப்புடன் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால், இதில் இடதுசாரிகள் பங்கேற்பது சந்தேகமே.
இந் நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 5ம் தேதி டெல்லி செல்வார் எனத் தெரிகிறது.
டெல்லி செல்லும் முதல்வர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி தற்போது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு திமுக தீர்வு காண முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது.
இதற்கிடையே நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் நடை பெறுகிறது. இதில், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ எடுத்த முடிவைப் பின்பற்றி இறுதி முடிவு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை இடது சாரிகள் வாபஸ் பெற்றால், அரசுக்கு ஆதரவு கொடுத்து கவிழாமல் காப்பாற்றலாம் என்பது பற்றி முடிவு எடுக்க சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் தலைமையில் வருகிற 3-ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications