2 அரவாணிகள் தீக்குளிப்பு: தொல்லை தந்த அரவாணி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் 2 அரவாணிகள் தீக்குளித்த சம்பவத்தில் இன்னொரு அரவாணியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் காமராஜ் நகரை சேர்ந்த அரவாணிகள் தெய்வானை என்கிற தேவி (28), லதா (26). அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா என்ற அரவாணி, தெய்வானையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தெய்வானை 1ம் தேதி இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற லதா முயன்றார். அப்போது அவரும் தீக்காயமடைந்தார்.

இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சக அரவாணிகள் ஜெயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாரிடம் வலியுறுத்தினர். போலீஸ் அதிகாரிகளையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சாத்தங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அரவாணி ஜெயாவை கைது செய்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+