தாய் கொலை-மகள் கற்பழித்துப் படுகொலை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தாயைக் கொன்ற மர்ம கும்பல், அவரது மகளை கற்பழித்துக் கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ளது பெத்தமநாயக்கனூர் பாளையம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலையில் இவர் வெளியே சென்றிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல்முருகன் வீட்டுக்குள் புகுந்தது.
அங்கிருந்த முருகனின் மனைவி மீனாவை அடித்து படுகொலை செய்தனர். பின்னர் மீனாவின் மகள் செல்வியை கொடூரமாக கற்பழித்து பின்னர் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
நீண்ட நேரம் கழித்து முருகன் வீடு திரும்பியபோது மனைவியும், மகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
தாயும், மகளும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீஸார் விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications