ஜனாதிபதியிடம் சமாஜ்வாடி 'ஆதரவு' கடிதம்
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிப்பதாக ஜனாதிபதியிடம் சமாஜ்வாடிக் கட்சி இன்று கடிதம் அளித்தது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை இன்று பிற்பகலில் சந்தித்து இது தொடர்பாக கடிதத்தை வழங்கினார்.
முலாயம் சிங்கிடம் 39 எம்பிக்கள் உள்ளனர். இதி்ல் அதீக் அகமத், அப்சல் அன்சாரி ஆகியோர் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர்.
மேலும் அதீக் அகமது, பேணி பிரசாத் வர்மா, ராஜ் பப்பார், முனாவர் ஹூசேன் ஆகிய 4 பேர் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் சமாஜ்வாடி எம்பிக்களாக இல்லை.
ஆனாலும் பேணி பிரசாத் வர்மாவும் ராஜ் பப்பாரும் காங்கிரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சமாஜ்வாடியின் சார்பில் 37 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும் என அக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறுகிறார்.
ஆனால், அவர் நேற்று கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தில் மோகன் சிங், ரியோதோய் ராமன் சிங், கீர்த்திவர்தன், ராதேஷியாம் கோரி ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்கள் சொந்த காரணங்களுக்காக வரவில்லையே தவிர, இவர்களும் காங்கிரசுக்கு வாக்களிப்பர் என முலாயம் கூறுகிறார். ஆனால், இந்த நால்வரும் காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
சிறையில் இருக்கும் 2 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்களிக்க முடியாது. இத்தோடு அதிருப்தியாளர்களின் வாக்குகளையும் சேர்த்தால் 6 எம்பிக்களின் வாக்குகளை காங்கிரஸ் இழக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் ஒரு எம்பியான ஜெய் பிரகாஷ், காங்கிரசை எதிர்த்தாலும் முலாயம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுவிடுவார் என்று தெரிகிறது.
இவரைத் தவிர லோக்தந்ரிக் கட்சியைச் சேர்ந்த எம்பியான பாலேஸ்வர் யாதவ், முலாயம் யாருக்கு சொன்னாலும் வாக்களிப்பேன் என அறிவித்துள்ளார்.
இதனால் தனது எம்பிக்கள் 39 பேரில் 38 பேரின் ஆதரவை மத்திய அரசுக்கு வழங்குவதாகக் கூறி ஜனாதிபதியை சந்தித்து இன்று கடிதம் அளித்தது சமாஜ்வாடிக் கட்சி. இந்த 38ல் லோக் தந்ரிக் எம்பியும் அடக்கம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications