ராமேஸ்வரத்தில் 13ம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வரும் 13 -ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் தேமுதிக சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.
இது குறித்து தேமுதிக சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஜின்னா கூறுகையில், இலங்கை கடற்படை தாக்குதலால் 1983 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால் மீனவர்கள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதற்காக தேமுதிக சார்பில் கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 13 ம் தேதி அன்று ராமேஸ்வம் வருகிறார்.
ராமேஸ்வரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றார் அவர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications