விரைவில் நம்பிக்கை வாக்கு கோர மன்மோகன் சிங் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோருவார் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக விரைவில் லோக்சபா சிறப்புக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

பிரதமர் மனமோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மாலையில் சந்திக்கவுள்ளார். அப்போது தனது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்க முடிவு செய்துள்ளாக கூறப்படுகிறது.

இதற்காக விரைவில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி அடைந்தால் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தம் திரும்பப் பெறப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+