மேற்கு தொடர்ச்சி மலையில் 10 கி.மீ தூரத்துக்கு தீ!
புளியங்குடி: புளியங்குடி அருகே உள்ள மலையில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. 10 கிமீ தூரம் வரை காட்டுத் தீ இப்போது பரவிவிட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் இதில் எரிந்து சாம்பலாயின.
சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை சோணப்பாதை பீட் அருகே உள்ள காட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது.
காற்று பலமாக வீசியதால் தீ சுமார் 10 கி.மீ வரை பரவியது. இதில் தேக்கு, வேங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் என பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது. பல இடங்களில் இப்போதும் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது.
தகவலறிந்த மாவட்ட வன பாதுகாவலர் ராம்தின், மாவட்ட வன அதிகாரி அம்புரோஸ் ஆகியோர் தீப்பிடித்துள்ள பகுதிக்கு வந்தனர். மேலும் வனசரகர் ஜெயசந்திரன் தலைமையில் வனத் துறையினர் மற்றும் வனக் குழுவினர் 50 பேர் காட்டுப் பகுதியில் முகாமிட்டு விடிய விடிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டு தீயால் பல அரிய வன விலங்குகளும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications