மதுரை-காணாமல் போன சிறுமி கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே காணாமல் போன சிறுமி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

மதுரை அருகே உள்ள புது தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் கார் டிரைவர். இவரது மகள் கோபிகா (3). நேற்று மாலை முதல் கோபிகாவை காணவில்லை.

அவரது குடும்பத்தினரும், உற்றார், உறவினரும், நண்பர்களும் கோபிகாவைத் தேடி வந்தனர். போலீஸாரும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வறண்டு போனகால்வாயில் கோபிகா இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். அவளது கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தது. காதுகள் இரண்டும் துண்டித்து எடுக்கப்பட்டிருந்தன.

காதில் இருந்த தங்கத் தோடுகள் மற்றும் காலில் கிடந்த கொலுசுக்காக கொடூரர்கள், கோபிகாவைக் கொன்றிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, புதுத் தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஒத்தக்கடை - திருமோகூர் சாலையில், சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி இப் போராட்டம் நடந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் அந்த மதுக் கடையை மூட உத்தரவிட்டார். அதன் பேரில் மதுக்கடை மூடப்பட்டது, கிராமத்தினரின் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+