இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அடிப்பது, துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்வது, மீன் பிடிக்க செல்லும், மீனவர்களிடம் உள்ள ஜிபிஎஸ் கருவிகள்,மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வது ஆகியவற்றைக் கண்டித்து, இலங்கை அரசுக்கு எதிராக கடந்த 2 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஸ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் இன்று மறியல் செய்யப் போவதாக மீனவ சங்கங்கள் அறிவித்திருந்தன. இருப்பினும் இதை கடைசி நேரத்தில் மாற்றிய மீனவர்கள், மறியலுக்கு பதில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
அதன்படி ராமேஸ்வரம் - பாம்பன் சாலையில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications