For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு மீதான நடவடிக்கை தவறா? நடுநிலையாளர்கள் சொல்லட்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: காடுவெட்டி குருவின் பேச்சைப் படித்து விட்டு, அவர் மீதான அரசின் நடவடிக்ைக தவறா, சரியா என்பதை நடுநிலையாளர்கள் ெதரிந்து கொள்ளட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- "குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப் புக்கு தீங்கு விளைவித்துள்ளார்? அவர் எந்த வழிகளில் ஊறு விளைவித்தார்'' என்று பா.ம.க. தலைமை கேட்கிறதே?

கருணாநிதி:- பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தக்கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனைப் படிக்கும் பொது மக்களுக்கும், அவருக்கும் நினைவூட்டுகிற வகையில் குரு பேசிய பேச்சின் சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒருமுறை தெரிவிக்கின்றேன். இதைப்படித்து பார்த்து விட்டு, குரு மீதான நடவடிக்கை சரியா? தவறா என்பதை நடுநிலை யாளர் தெரிந்து கொள்ளட்டும்.

- எம்.எல்.ஏ. சிவசங்கரு டைய அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. சிவசங்கர் நேற்று வந்த சின்னப் பையன்

- மத்திய அமைச்சர் ராஜா கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்.

- எங்கள் மாவட்டச் செயலாளர் வைத்தி மீது பொய் வழக்கு நீ போடச் சொன்னாயோ அல்லது உன் தலைவர் கருணாநிதி போடச் சொன்னானா, நீ எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போடு, ஜெயிலுக்குப் போவது ஒன்றும் புதுசு அல்ல. என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது.

- எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்கு போட்டால் இந்த மத்திய அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது. உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்து விடுவோம்.

- பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த மாமா சொல்லி இந்தப் போலீஸ்காரன் பொய் வழக்கு போடுகிறான். போலீஸ் எங்கள் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். ஒரு போலீஸ்காரன் கூட பொண்டாட்டிக் கிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் கூட ஓடாது, எரித்து விடுவோம்.

- மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்கிறான். மிரட்டித்தான்டா வசூல் செய்தோம். உன்னால என்ன புடுங்க முடியும். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபீசை மூடி விடுவேன்.

- டேய் சிவசங்கர் நீ சின்னப் பையன். உன் அப்பனைக் கேளுடா, நீ மட்டும் வைத்தியை கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத்தேர்தல் வந்திருக்கும்.

- வைத்தியை உள்ளே அனுப்பி விட்டு நாங்கள் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா.

- இனிமேல் தி.மு.க.காரன் எந்தப் பொதுக்கூட்டத்திலும் தாக்கிப் பேசினாலும் அத் தனை பேரையும் வெட்டிக் கொளுத்துங்கடா. இந்த ராஜாவோ, கருணாநிதியோ என் மயிரைக்கூடப் புடுங்க முடியாது.

- கருணாநிதி நீ நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது.

- ஆற்காடு வீராசாமி ஆந்திராவிலிருந்து வந்தவன். இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம் வன்னியர் கல்விக் கோயிலை பொறம்போக்கு நிலத்தில் கட்டுகிறோம் என்று சொல்கிறான்.

- மானங்கெட்ட பயலு களா 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக போராடுகின்ற ஒரே தலைவன் இந்தியாவிலேயே நமது மருத்துவர் ஐயாதான்.

- கருணாநிதியே நீ, திராவிடம் பேசி எங்களை ஏமாற்றியது போதும். இனி நீ திராவிடம் பேசாதே.

- கருணாநிதி சொல்கிறான் வன்னிய சமூகத்திற்காக மூன்று அமைச்சர்களைக் கொடுத்து இருக்கிறேன் என்று. இரண்டு கோடி மக்கள் உள்ள சமுதாயத்திற்கு மூன்று அமைச்சராம். இரண்டு சதவீதம் உள்ள ஆற்க்காடு வீராசாமிக்கும் மூன்று அமைச்சராம். என்னங்கடா உங்கள் நியாயம்.

- அமைச்சர் ராஜா கட்சிக்காக எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றிருக்கிறான். சிவசங்கர் எத்தனை முறை சென்றிருக்கிறான். நாங்கள் தமிழ்நாட்டில் எல்லா ஜெயிலையும் பார்த்து விட்டோம். இன்னும் டெல்லி திகார் ஜெயில் தான் பார்க்க வில்லை. அதற்கும் செல்லத் தயாராக இருக்கிறோம்.

- ராஜா, 1989-க்கும் முன்னாடி ஒரு தி.மு.க. காரன் கூட அவன் கட்சிக் கொடியைக் கூட கட்ட முடியாது. ஒரு தி.மு.க. கொடிக் கம்பம் கூட இல்லை. எல்லாவற்றையும் வெட்டிச் சாய்த்து ஓட ஓட விரட்டினோம். உனக்குத் தெரியாவிட்டாலும் பழைய தி.மு.க. காரனைக் கேட்டுத் தெரிந்து கொள்.

- நீ எங்களை ஜெயிலுக்கு அனுப்பினாலும், என்ன செய்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது. 2011-ல் தமிழ் நாட்டில் பா.ம.க. ஆட்சியை அமைக்கும். இதை கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாராலும் தடுக்க முடியாது.

- கருணாநிதியே எங்களுக்கு முகவரி இருக்கிறது. உனக்கு இருக்கிறதா. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தான் உள்ளது. வன்னியர் சங்கம் இல்லை. அதனால் நீ என்னை மிரட்டிப் பார்க்காதே. நீ எத்தனை வழக்கு போட்டாலும் சந்தோசமாக ஜெயிலுக்கு செல்வோம். ஆனால், மீதமுள்ள என் சகோதரர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவார்கள்.

- நம்மை போன்ற பாட்டாளி வர்க்கமான ஏழை விவசாயி தானே குடிக் கிறான். அவர் மனைவி பிள்ளைகளை பட்டினி போட்டு விட்டு அவர்களின் தாலியை அறுத்தல்லவா சம்பாதிக்கிறான் கருணா நிதி.

- ராஜாவே! நீ சொல்லி வழக்கு போட்டாயா, உன் தலைவர் கருணாநிதியை மரியாதையாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல், இல்லை என்றால் பொய் வழக்கு போடும் போலீசை செயல்பட விட மாட்டோம், எல்லோரையும் வெட்டி சாய்த்து விடுவோம்.

- இந்த மாவட்டமே தீ பிடித்து எரியும். எங்கள் கட்சி இளைஞர்களிடம் வெட்டரிவாள், வேல் கம்புமாக வீட்டுக்கு ஒருவர் வருவோம், போலீசா, நாங்களா என்று பார்த்து விடுவோம், நேரடியாக எச்சரிக்கிறேன். வன்முறை என்றால் என்னவென்றே தெரியாத கட்சியைச் சேர்ந்த வர் பேசிய பேச்சுத் தான் இது, இதற்காகத் தான் வழக்கு!

கேள்வி: விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன், பா.ம.க.விற்கும், தி.மு.க. விற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த செய்த முயற்சி என்னவாயிற்று?

கருணாநிதி: திருமாவளவன் என்னைச் சந்தித்த போது இந்த பிரச்சினை குறித்து சமாதானம் பேசினார். அவரிடம் குருவின் பேச்சு பற்றி எல்லாம் விளக் கப்பட்டது. அப்போது அவர் என்னிடம் பா.ம.க. வின் பொதுக் குழு இன்று சென்னையிலே நடை பெறுகிறது.

நான் நேராக டாக்டர் ராமதாஸ் அவர்களை தான் சென்று சந்திக்கப் போகி றேன். அவரிடம் சொல்லி இவ்வாறு பேசிய பேச்சிற்காக வன்னியர் சங்கத் தலை வர் குருவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறேன். அதற்கு பிறகு சமாதானம் அடைந்து விடுவீர்களா என்று கேட்டார்.

மேலும் மன்னிப்பு என்ற வார்த்தை சற்று கடுமையாக இருப்பதாகத் தெரிவித்தால் வருத்தம் தெரிவித்தால் போதுமா என்று கேட்டார். முயற்சித்து விட்டுப் பேசுங்கள் என்று சொல்லி விட் டேன். அவரும் சென்று பேசி இருக்கிறார்.

ஆனால் பொதுக் குழுவில் இது எதுவும் நடைபெறவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவ்வாறு பேசிய வரைக் கண்டித்து கூட ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை. எவ்வளவுதான் பொறுமையாக இருக்க முடியும்ப இந்த நேரத்தில் இன்னொரு உதாரணத் தையும் உங்களுக்குச் சொல்கிறேன். நேற்யை தினம் வெளி வந்த "குமுதம்'' வார இதழில் என்னுடைய பேத்தி கயல்விழி அளித்த ஒரு பேட்டி இடம் பெற்றுள்ளது.

அதிலே பா.ம.க. வைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் அந்த கட்சி அரசியல் அனாதையாக்கப்பட்டு விட்டது என்றெல்லாம் வந்திருப்பதைப் படித்தவுடன் தொலைபேசி மூலம் என் பேத்தியை அழைத்து நான் திட்டியதில் அவர் அழுது அழுது காய்ச்சலே வந்து விட்டது. உன்னுடைய வயது என்ன, அவருடைய வயது என்ன, நமக்கும் அவர்களுக்கும் அரசியல் உறவு இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் பேட்டியளிப்பது அரசியல் நாகரீகம் ஆகாது என்று எல்லாம் கூறிக் கண்டித்தேன்.

கேள்வி: குரு மீது புகார் மனு கொடுத்தவர்களே அதனை இல்லை என்றும் அப்படி புகார் செய்ய வில்லை என்றும் சொல்வதாக பா.ம.க. தலைவர் சொல்கிறாரே?

கருணாநிதி: புகார் கொடுத்த வர் ஒரு நீதிபதி யின் முன்னாலேயே அந்தப் புகாரைப் பதிவு செய்திருக்கிறார் என்று காவல் துறை கூறுகிறது. தற்போது அந்தப் புகாரை மறைந்து விட்டு மிரட்டலுக்கு அஞ்சி தான் புகாரே கூற வில்லை என்கிறார் என்பது தான் உண்மை என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

கேள்வி: உளியின் ஓசை திரைப்படத்தைப் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளும், தமிழ் பத்திரிகைகளும் மிகவும் பாராட்டி எழுதி வருகின்றன. ஆனால் குமுதம் மட்டும் பாராட்ட மனம் வராமல் விமர்சனம் செய்திருக்கிறதே?

கருணாநிதி: எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன்' திரைப் படம் வெளி வந்த போது இதே குமுதம் வார இதழ் ஒரு பக்கம் முழுவதும் வெற்றிடமாக காலியாக விட்டு "வெட்கக் கேடு'' என்று மட்டும் விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் அந்த படம் தமிழகத்திலே எந்த அளவிற்கு மாபெரும் வெற்றியினை பின்னர் அடைந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

கேள்வி: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஒன்றை இப்போது தொடங்கு கிறீர்களே முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கிய போது நீங்கள் அதை ஆதரிக்க வில்லையே ஏன்?

கருணாநிதி: மாநில அரசு இது போல கேபிள் டி.வி. நிறுவனம் ஒன்றை தொடங்கிட வேண்டுமானால், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும், அப்படி அனும தியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று ஜெயலலிதா ஆட்சியில் மாநில அரசே முழுமையாக கேபிள் டி.வி. நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்ததால், அதை ஆதரிக்க முடியவில்லை. நாம் கருதியபடியே அப்பொழுது மாநில அரசால் அந்த கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படவில்லை.

கேள்வி: ஜெயலலிதா தொடங்குவதாக அறிவித்த கேபிள் டி.வி.க்கும் இப்போது அரசு தொடங்கியுள்ள கேபிள் டி.வி.க்கும் என்ன வித்தியாசம்?

கருணாநிதி: அன்று ஜெய லலிதா தொடங்குவதாக இருந்தது அனைத்து டி.வி. கம்பி வடங்களும் அரசுக்கே சொந்தம் மற்ற கேபிள் டி.வி. நிறுவனங்கள் அந்த தொழிலில் ஈடுபட முடியாத அளவுக்கு அமைந்திருந்தது என்ற நிலையில் தொடங்கப்பட்டது. இப்பொழுது அரசு கேபிள் டி.வி. தொடங்கினாலும் மற்ற அனைத்து தனியார் நிறுவனங் களும் தொடர்ந்து கேபிள் இணைப்பு சேவைகளை வழங்கி வரலாம். தற்போது தொடங்கப்படும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுவில் இயங்கக் கூடிய நிறுவனமாகும். அரசுக்கே ஏகபோகம் அல்ல.

கேள்வி: உளியின் ஓசைக்குப் பிறகு கருணாநிதி யின் "பொன்னர் சங்கர்'' கதையும் திரைப்படமாக வர இருக்கிறது. இந்த செய்திப்படி கருணாநிதிக்கு மற்றொரு நாட்டுப்பணி காத்திருக்கிறது என்று ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறாரே?

கருணாநிதி: என்ன செய்வதுப "கூந்தல் உள்ள பெண்மணி அள்ளி முடிகிறாள்'' என்பது பழமொழி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X