நெல்லையில் சூடு பறக்கும் வெள்ளரி விற்பனை
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் டி.கல்லுபட்டி, சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளரி உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் கோடை காலத்தில் சூட்டை தணிக்கும் தார்பூசணி பழத்திற்கு ஈடாக வெள்ளரி விற்பனையும் நடந்து வந்த நிலையில் கோடை மழையால் வெள்ளரி தோட்டங்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக வெள்ளரி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதோடு வேலையின்றி தவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் வெள்ளரி சாகுபடி செய்தனர். தற்போது நெல்லை மாவட்ட பல பஸ் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
ஒரு வெள்ளரி பிஞ்சு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது குற்றால சீசன் மந்தமான நிலையில் வெயில் அதிகமானதாலும், பொதுமக்கள் மற்றும் குற்றால சீசனுக்கு வரும் பயணிகள் வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி உடல் சூட்டை தணித்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி மாடசாமி கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெள்ளரி பயிரிட்டு விற்பனை செய்து வந்தோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை மழையால் வெள்ளரி பயிர்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது கடந்த மாதம் சாகுபடி செய்த வெள்ளரி நன்கு விளைந்துள்ளதால் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications