மின் தடை விவகாரம்: தொழிலதிபர்களுடன் கருணாநிதி ஆலோசிக்க முடிவு
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் போக்குவது குறித்து தொழிலதிபர்களின் கூட்டத்ைத சென்னையில் கூட்டி முதல்வர் கருணாநிதி விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் கருணாநிதி தலைமையில் புதனன்று மாலை அமைச்சரவையின் 29ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு சம்பந்தமாக நீதியரசர் சண் முகம் அளித்துள்ள விசாரணை அறிக்கை குறித்து அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், இதனை எப்படி சீர் செய்வது என்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக வெள்ளியன்று முக்கிய தொழிலதிபர்களை அழைத்துப் பேசி பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அறிவிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ரேஷனில் பருப்பு - பாமாயில் விற்பனை தொடரும்:
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகிய பொருட்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு மானிய விலையில் தொடர்ந்து வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டு, இத்திட்டத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு தொடருவது என்றும் முடி வெடுக்கப்பட்டது.
அரசாணை நிலை எண். 161, வணிக வரித்துறை, நாள் 13.10.2000ல் டைடல் பூங்கா வில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு எழுதிக்கொடுக்கப்படும் விற்பனை மற்றும் குத்தகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை விலக்களித்து வெளியிடப்பட்ட அறிவிக்கை; பிரிக்கப்படாத அடி மனைக்கும் பொருந்தும் பொருட்டு தக்க திருத்தம் செய்யலாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது.
இந்தியத் தொழில் நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கு சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத் திற்கு (ஐஐடி, சென்னை) வழங்கப்பட்ட 11.42 ஏக்கர் நிலத்திற்கு பத்தாண்டுகளுக்கு ஆண்டுக் குத்தகையாக ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்வதென்றும், பத்தாண்டுகளுக்குப் பிறகு பெறப்படும் மொத்தக் குத்தகையில் இரண்டு சத விகிதம் ஆண்டுக் குத்தகையாக நிர்ணயிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மலைப் பகுதி கள் சட்டம், 1955 மற்றும் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், 1949 இல் உள்ள விதி 2-ஏக்கு திருத்தம் வெளியிட எடுக்கப்படும் நடவடிக்கை யினை கைவிடலாம் என்றும், ஏற்கனவே நிலவி வரும் நிலையினைத் தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவு செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications