சோனியாவுடன் காங். எம்.பிக்கள் சந்திப்பு!

மன்மோகன் சிங் அரசு லோக்சபாவில் 21ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறது. 22ம் தேதி தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அரசுக்கு ஆதரவான வாக்குகளை காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் திரட்டி வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் போதிய ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தடுமாற்றத்தைக் கண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்போது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. சில எம்.பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மறைமுகமாக கூறி வருகின்றனர்.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் எம்.பிக்களையும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைத்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி வந்துள்ளனர். அனைவரும் சோனியா காந்தி வீட்டில் அவரை சந்தித்தனர். அவர்களுடன் சோனியா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதித்தார்.
இன்று இரவு அவர்களுக்கு விருந்தளித்து கெளரவிக்கிறார் சோனியா. இதையடுத்து நாளை பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் எம்.பிக்கள் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்புகளின்போது எத்தனை காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவாக உள்ளனர் என்பது குறித்தும் சோனியா காந்தி தெளிவுபடுத்திக் கொள்ளவுள்ளார்.
காங்கிரஸுக்குள்ளேயே அதிருப்தி நிலவுவதால் ஆதரவு எம்.பிக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே சோனியா காந்தி அனைத்து எம்.பிக்களையும் அழைத்துள்ளார் என்று தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications