சென்னை செல்போன் கடை சூறை - ரூ.15 லட்சம் போன்கள் திருட்டு
சென்னை: சென்னை அருகே தாம்பரத்தில்,செல்போன் கடையை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சிவலோகராஜ். இவர் தாம்பரம் சண்முகம் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று காலை வழக்கம்போல கடையை திறந்தார். அப்போது கடையில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் விலை உயர்ந்த செல்போன்களையும் காணவில்லை.
இதையடுத்து போலீசில் சிவலோகராஜ் புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். 150 செல்போன்கள் திருட்டுப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவில் கடையின் பின்புற சுவரை துளையிட்டு கடைக்குள் நுழைந்துள்ளனர். திருட்டு நடந்த கடை போலீஸ் நிலையத்துக்கு 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியின் முக்கிய வணிக மையமான சண்முகம் சாலை எப்போதும் கூட்ட நெரிசல் மிக்க இடம்என்பதால் இந்தக் கொள்ளை போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications