காங்-பாஜக சதி கூட்டணி- மாயாவதி புகார்
டெல்லி: நான் பிரதமராக வரக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் கூட்டணி அரசு வெல்ல பாஜக துணை போயிருக்கிறது என உ.பி. முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு அபார வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்புக்கு வராமல் இருந்ததாலும், சிலர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாலும், அரசின் வெற்றி சாத்தியமானது.
வாக்கெடுப்புக்கு முன்பே, மாயாவதியின் செல்வாக்கு பெருகி விடக் கூடாது என்பதற்காக அரசு கவிழ்வதை பாஜக விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் நடுநிலை வகிக்கலாம் என்றும் கூறப்பட்டது. நேற்று அதேபோலவே நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது கொள்கைகளால் வெற்றி பெறவில்லை. இந்த வெற்றி பகுஜன் சமாஜ் கட்சியை தடுக்க வேண்டும் மற்றும் தலித் பிரதமராவதை தடுக்க வேண்டும் எனும் கூட்டு சதியால் ஏற்பட்டதாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை இணைந்து இந்த சதித் திட்டத்தை தீட்டின. அத்வானி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காக இந்த இரு கட்சிகளும் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றன என்றார் அவர்.
இந் நிலையில் இன்று இடதுசாரிகள், மாயாவதி, மற்றும் மூன்றாவது அணியின் தலைவர்கள் டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications