3 பாஜக எம்பிக்கள் மீது சமாஜ்வாடி உரிமைமீறல்
டெல்லி: லஞ்சம் கொடுத்ததாக தங்கள் மீது பழி சுமத்திய பாஜக எம்பிக்களான பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் மீது சமாஜ்வாடி கட்சி உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பான நோட்டீஸை சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் மோகன் சிங் இன்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் வழங்கினார்.
அவர் கூறுகையில், லஞ்சம் வாங்கியதே முதல் தப்பு. இதனால் அவர்கள் மீது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். முன்பு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய எம்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே விதி இங்கும் பொறுந்தும்.
லஞ்சத்தை யார் கொடுத்தது என்பது குறித்து மக்களவை கவலைப்படத் தேவையில்லை. அதை வாங்குவது மாபெரும் குற்றம். பாஜக எம்பிக்கள் தாங்கள் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டுவிட்டதால், அவர்கள் மீது அவை நடவடிக்கை எடுக்கலாம்.
மேலும் சபாநாயகருக்குத் தெரியாமல் ஒரு கோடி ரூபாயை அவைக்குள் கொண்டு வந்தது அதைவிடத் தப்பு. இதற்கு சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவரது அனுமதியில்லாமல் எந்தப் பொருளையும் கொண்டு வருவது விதிமீறல். இதனாலும் அந்த 3 பாஜக எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவையின் மாண்பை காப்பார்கள் என நம்புவதால் வழக்கமாக எம்பிக்களை யாரும் சோதனையிடுவதி்ல்லை.
மூத்த எம்பிக்கள் ஊன்றுகோலைக் கொண்டு வந்தால் கூட அதை அவைக்கு வெளியே விட்டுவிட்டு வருவது தான் இன்றும் கூட மரபாக உள்ளது. அவர்களை அதிகாரிகள் தான் தாங்கிப் பிடித்து இருக்கைக்கு அழைத்து வருவது இந்த அவையின் அழகிய விதி.
ஆனால், இரண்டு பெரிய பைகளில் கோடி ரூபாயை அள்ளிப் போட்டுக் கொண்டு உள்ள புகுந்துள்ளனர் இந்த மூவரும்.
மேலும் இன்னொரு விஷயத்திலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவையில் நான் பேச முயன்றபோது, என்னைத் தடுத்த இந்த பாஜக எம்பிக்கள் மூவரும் பணப் பையுடன் என் மீது பாய்ந்தனர். இதன்மூலம் என் உரிமையிலும் தலையிட்டுள்ளனர்.
இதைத் தவிர இந்த எம்பிக்கள் மீது நடவடிக்கை கோர இன்னொரு முக்கிய காரணம். மிக இக்கட்டான நிலையில் உலகமே இந்திய நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தபோது பணத்தைக் கொண்டு வந்து அங்கே கொட்டி அவையின் மரியாதையயும் நாட்டின் மானத்தையும் வாங்கிவிட்டனர்.
இந்தக் காரணங்களால் இவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரியுள்ளேன் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications