புதுக்கோட்டை தொகுதியை மீட்க ஜனாதிபதியிடம் மனு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் சேவியர் தலைமையிலான மீட்பு குழு நாளை டெல்லியில் ஜனாதிபதியிடம் மனு கொடுக்கின்றனர்.
தொகுதிகள் சீரமைக்கப்பட்டதில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியை மீட்க முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் சேவியர் தலைமையில் 11 பேர் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தொகுதியை மீட்க ஜனாபதிபதிக்கு லட்ச கணக்கான கடிதம் அனுப்பி வைத்தது. மேலும், மீட்புக்குழு சார்பிலும், அரசியல் கட்சிகளும் ரயில் மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் என பல கட்ட தொடர் போராட்டங்களை நடத்தின.
தொகுதியில் நடைபெறும் தேர்தலையும் புறக்கணிக்க மக்களும் அரசியல் கட்சிகளும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் சேவியர் தலைமையில் மீட்பு குழு நாளை ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று அவர்கள் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications