விடிய விடிய சாரல்-குற்றால அருவிகளில் குளிக்க தடை
Subscribe to Oneindia Tamil

இதனால் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து மிகவும் அதிகரித்தது. மெயினருவியில் காலை 8 மணி முதல் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. வெள்ளம் மற்றும் கலங்கலான தண்ணீர் காரணமாக பயணிகளை அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதோபோல் ஐந்தருவியில் உள்ள ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டியது.
இதையடுத்து அங்கும் குளிக்க தடை விதித்தனர். இன்று காலை புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. புலியருவியில் தண்ணீர் விழத் துவங்கியதும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் குளிக்க தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications