அண்ணா-எம்.ஜி.ஆர் சிலைகள் சேதம்: ஜெ. கண்டனம்
சென்னை: காரைக்குடியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளை சேதப்படுத்திய விஷமிகளைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகளை அரசு நிறுவ வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி செக்காலை பகுதியில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக சார்பில் போராட்டமும், போலீஸில் புகாரும் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த செயலுக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 25-ந் தேதி காரைக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், சமூக விரோதிகள் மூலம் 25-ம் தேதி இரவு காரைக்குடி 2-வது தெருவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலையையும்,
காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையையும் உடைத்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த வன்முறைச் செயல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல உடைக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகமே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கள் பிரச்சனையை முன்வைத்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தும் போது, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயமாகும்.
இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்து வதோடு மட்டுமல்லாமல் கூடுதல் பிரச்சனைகளை உருவாக்க வழி வகுக்குமே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழி வகுக்காது.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் எந்த இடத்திலும் நிகழாத வண்ணம் தடுப்பதற்கு காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications