நகராட்சி லஞ்ச அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில் வழக்கு
கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சியில் உள்ள லஞ்ச அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
எனது மகன் கார்த்திக். அவனுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி கும்பகோணம் நகர் நல அலுவலகத்துக்குச் சென்றேன். நகர் நல ஆய்வாளர் ரமேஷ்குமார், சூப்பர்வைசர் உத்ராபதி, ஊழியர் முத்துசாமி ஆகியோர் என்னிடம் ரூ.1,200 வரை கேட்டனர்.
நான் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ஆண்டு 2006. ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு துணை தாசில்தார் கையெழுத்திட்ட பிறப்பு சான்றிதழை வழங்கிள்ளனர். அவர்கள் பணம் கேட்ட விவரத்தை சிடியில் பதிவு செய்துள்ளேன்.
அதிகாரிகளின் இந்த போக்கு பொது மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதுகுறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்குனர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோர் விசாரணை நடத்தி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மூன்று வாரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications