உலகின் பல நாடுகளிலும் முழு சூரிய கிரகணம்

Subscribe to Oneindia Tamil

Solar Eclipse
சென்னை: இன்று (ஆகஸ்ட் 1) உலகின் பல நாடுகளிலும் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வருவதால் சூரியன் மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதால் முழு கிரகணம் உண்டாகிறது.

இந்த கிரகணம் கனடாவில் ஆரம்பித்து வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக், ரஷ்யா, மங்கோலியா, சீனா என அடு்த்தடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் தெரிந்தது.

ரஷ்யா, மங்கோலியா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் சூரிய கிரகணம் முழுமையாக இருந்தது.

கனடாவின், நியூ பெளன்ட்லேண்ட் அருகே வடக்கு அட்லாண்டிக் கடலில் சூரிய கிரகணம் முதலில் தெரிந்தது. முழு சூரிய கிரகணத்தை பிற்பகல் 2.53 மணிக்கு, வடக்கு கனடாவின் விக்டோரியோ தீவின் தென் கிழக்கு கடற்கரை அருகே பார்க்க முடிந்தது.

முழு சூரிய கிரகணம் மொத்தம் 2 நிமிடம் 30 விநாடிகளுக்கு நீடித்தது.

இந்த கிரகணம் வட அமெரிக்காவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், கிரீன்லேண்ட், வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் தவிர ஆசியாவின் மற்ற நாடுகளில் தெரியும்.

தென் கிழக்கு சீனாவின் ஸியான் மாகாணத்தில் முழு சூரிய கிரகணம் 4.50 மணிக்கு தெரிந்தது.

இந்தியாவில் இது பகுதி சூரிய கிரகணமாக இருந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.34க்கு சூரிய கிரகணம் தொடங்கியது. மாலை 6.08 மணிக்கு அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே வங்கக் கடலில் கிரகணம் முடிவடைந்தது.

சீனாவில் இதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட்டது. சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு அங்கு இருள் சூழ்ந்துள்ளது.

அதே சமயம் ரஷ்யாவிலும் கிரகணம் தொடங்கியது. அந் நாட்டின் சைபீரியா பகுதியில் அங்கு முழு கிரகணம் தெரிந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

சூரிய கிரகணத்தை நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் வெப்சைட்டுகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன.

இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலை 22ம் தேதி இன்னொரு முழு சூரிய கிரகணம் வருகிறது.

தமிழகத்தில் ..

சென்னையில் மாலை 4.40 மணி முதல் 6.08 மணி வரை கிரகணம் தெரிந்தது. உச்ச நிலை மாலை 5.25 மணிக்கு காணப்பட்டது.

புதுச்சேரியில் மாலை 4.44 மணி முதல் 6.07 வரை கிரகணம் காணப்பட்டது. உச்ச நிலை மாலை 5.27 மணிக்கு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் மாலை 4.47 மணி முதல் 6.07 வரை காணப்பட்டது.உச்ச நிலை 5.28 மணிக்கு ஏற்பட்டது.

மதுரையில் மாலை 4.50 மணி முதல் 6.06 மணி வரை காணப்பட்டது. உச்ச நிலை மாலை 5.29 மணிக்கு ஏற்பட்டது.

நெல்லையில் மாலை 4.54 மணி முதல் 6.05 மணிவரை காணப்பட்டது. உச்ச நிலை மாலை 5.31 மணிக்கு ஏற்பட்டது..

கன்னியாகுமரியில் மாலை 4.57 மணி முதல் 6.05 வரை காணப்பட்டது. உச்ச நிலை மாலை 5.32 மணிக்கு ஏற்பட்டது.

கோவில்கள் மூடல்:

சூரிய கிரகணத்தையொட்டி தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான கோவில்கள் நடை சாத்தப்பட்டிருந்தது.

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சந்திர கிரகணம் வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+