பாஜகவின் சிஎன்என் டிவி புறக்கணிப்புக்கு கண்டனம்
டெல்லி: 'ஓட்டுக்கு நோட்டு' விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பாத வரையில், சிஎன்என்-ஐபிஎன் டிவியை பாஜக புறக்கணிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறியிருப்பதற்கு பல்வேறு டிவி நிறுவனங்களும், அதன் எடிட்டர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து வாக்களிக்க முன்பணமாக 3 பாஜக எம்பிக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு அந்த பணக் கட்டுகள் லோக்சபாவில் கொண்டு வந்து காட்டப்பட்டன.
எம்.பிக்களுக்கு ரூபாய் நோட்டுக்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டதை சிஎன்என் -ஐபிஎன் டிவி ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மேலும், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பரிசீலனையில் விவகாரம் இருப்பதால், அது முடியும் வரை தாங்கள் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பப் போவதில்லை என சிஎன்என் அறிவித்துள்ளது.
இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிஎன்என் ஐபிஎன் டிவியைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், அந்த சேனல் அரசாங்கத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. 'ஓட்டுக்கு நோட்டு' குறித்த விடியோ காட்சிகளை முழுமையாக ஒளிப்பரப்பும் வரை சிஎன்என்ஐபிஎன் சேனலின் விவாத நிகழ்ச்சிகளில் பாஜக நிர்வாகிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
இந்த வீடியோ காட்சிகளை ஒளிப்பரப்புவதில்லை என்ற முடிவு பத்திரிக்கை சுதந்திரத்தில் செய்துக் கொள்ளப்பட்ட சமரசம். உண்மையை மறைப்பதற்கு சமமான செயல் என்றார் நாயுடு.
ஆனால் இதை ஐபிஎன் சானலின் தலைவரான ராஜ்தீப் சர்தேசாய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இதழியல் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எங்களது முடிவு என்றார்.
பாஜகவுக்கு கண்டனம்:
இந் நிலையில், பாஜகவின் முடிவுக்கு செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்திய எடிட்டர்கள் கில்டு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பத்திரிக்கை சுதந்திரம் மீதான புதிய வகை மிரட்டலாகும்.
மீடியா உலகம் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு விரோதமாக இந்த முடிவை எடுத்துள்ளது பாஜக. இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
எது தேவை, எது தேவையில்ல என்பதை முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை அரசியல் கட்சிகள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். இதில் எந்த வகையான தலையீட்டையும் அனுமதிக்க முடியாது.
அப்படி ஒரு தலையீடு மீடியா நிறுவனத்தின் மீது திணிக்கப்பட்டால் அது தனது சுதந்திரத்தை இழந்து விடும். அந்த வகையில் பாஜகவின் புறக்கணிப்பு முடிவு பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
பாஜக தனது நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் மீடியா உலகுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை தவிர்க்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
எடிட்டர்ஸ் கில்டு தலைவர் அலோக் மேத்தா, பொதுச் செயலாளர் சச்சிதானந்த மூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் நெருக்குதல் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு செய்தியை ஒளிபரப்புவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த சானலின் ஆசிரியருக்கு உள்ளது. அதில் எந்த கட்சியும் தலையிட முடியாது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த வீடியோ ஒளிபரப்பை காட்டினால் அது விசாரணையின் போக்கை பாதிக்கும் என்பதால்தான் ஒளிபரப்பவில்லை என்று ராஜ்தீப் சர்தேசாய் விளக்கியுள்ளார். இதை பாஜக மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு செய்தியை ஒளிபரப்புவது அல்லது பிரசுரிப்பதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களின் மரபாகும். அதைத்தான் ராஜ்தீப் சர்தேசாய் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ டேப்புகளை சிஎன்என் டிவி தானாகவே முன்வந்து சபாநாயகர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. அதுதான் முறையான செயல். எனவே பாஜகவின் புறக்கணிப்பு முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது என்று கூறினர்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை!












Click it and Unblock the Notifications