டிசி தருவேன் என ஆசிரியர் மிரட்டியதால் மாணவர் தற்கொலை
விருதுநகர்: முறையாக படிக்காத மாணவரிடம் டிசி வழங்கப்படும் என பள்ளி ஆசிரியர் கூறியதால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது தாயில்பட்டி. இங்கு வசிப்பவர் போஸ். இவரது மன் கார்த்திக் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் படிப்பில் மந்தமாக இருந்துள்ளார். கூறப்படுகிறது. இதனால் இவரை தலைமை ஆசிரியர் வீரண்ணன் கண்டித்ததோடு, அவரது பெற்றோர்களை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினர். அப்போது சரியாக படிக்காவிட்டால் மாணவர் கார்த்திக்கின் டிசியை தந்து அனுப்பி விடுவேன் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த பள்ளி மாணவர் கார்த்திக்வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவரது பெற்றோர்கள் போலீசாருக்கு தெரியாமல் தங்களது மகன் பிரேதத்தை எரித்துள்ளனர்.
இதை தெரிந்து கொண்ட மாணவர்கள், கார்த்திக் தற்கொலைக்கு தலைமை ஆசிரியரே காரணம், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி - தாயில்பட்டி சாலையில் மறியில் செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications