செளதி: '8- 50' கல்யாணம்- எதிர்த்து தாய் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: 50 வயதைத் தாண்டிய நபருக்கு கட்டி கொடுக்கப்பட்ட தனது 8 வயது மகளின் திருமணத்தை ரத்து செய்யக் கோரி சவூதி கோர்ட்டை அந்நாட்டுப் பெண் அணுகியுள்ளார்.

சவூதி அரேபியாவில் உள்ள உனைஸா கோர்ட்டில் இந்த வழக்கை அந்தப் பெண்மணி தாக்கல் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரிடம், அப்பெண்ணின் கணவர் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகை பெருகவே அதை அடைக்க முடியாமல் திணறினார். இதையடுத்து அந்தக் கோடீஸ்வரருக்கு தனது 8 வயது மகளை திருமணம் செய்து வைத்து விட்டார். ஏற்கனவே அந்த வயதான கோடீஸ்வரருக்கு 2 மனைவிகள் உள்ளனராம்.

கணவரின் செயலால் கொதிப்படைந்த மனைவி தனது மகளுக்கு கணவர் செய்து வைத்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மனித உரிமை அமைப்புகளின் ஆதரவையும் அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது பொருத்தமே இல்லாத கல்யாணம். எனது மகளின் வாழ்க்கையே இதனால் பாழாகி விடும் என்றார் அவர்.

இதேபோன்ற ஒரு வழக்கில் ஆசிர் நகரில் உள்ள கோர்ட்டிலும் உள்ளது. 10 வயது மகளை 70 வயதைத் தாண்டிய கோடீஸ்வரருக்கு கட்டி வைத்து விட்டார் ஒரு கொடூரத் தந்தை. இதை எதிர்த்து அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+