14ம் தேதிக்குள் பதவி விலகுகிறார் முஷாரப்!

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப்பை நீக்குவதற்கான முயற்சிகளில் ஆளும் கூட்டணியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின்முஸ்லீம் லீக் கட்சியும் இறங்கியுள்ளன.
அடுத்த வாரம் பதவியிலிருந்து இறக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. நேற்று கொண்டு வரப்படுவதாக இருந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் வக்த் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதிக்கு முன்பாக அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த பின்னர் முஷாரப்புக்கு எந்தவித பிரச்சினையும் தரப்பட மாட்டாது என பாகிஸ்தான் மக்கள் கட்சி தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் வக்த் செய்தி கூறுகிறது.
மேலும் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாட்டு மக்களிடம் உரையாற்றும் வாய்ப்பையும் முஷாரப் கோரியுள்ளாராம்.
இந் நிலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் இரண்டு சட்டசபைகளில், முஷாரப் பதவி விலக வேண்டும் என கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications